மக்களுடன் முதல்வர் நிகழ்வில் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்.
மக்களுடன் முதல்வர் நிகழ்வில் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்.
மக்களுடன் முதல்வர் நிகழ்வில் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்.
பொள்ளாச்சி:தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்களின் குறைகளை கேட்டு அறிய மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தமிழக அரசு தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக ஆனைமலை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி மூலம் மின்சாரத்துறை மற்றும் எரிசக்தி துறை சார்பாக மின் இணைப்பு வழங்குதல்,மின் இணைப்பு குறித்த சேவைகள் - வருவாய் துறை சார்பாக பட்டா மாறுதல் மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கல் - குடிநீர் வழங்கல் துறை சார்பாக சொத்துவரி,தண்ணீர் வரி திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சேவைகள்-காவல்துறை சார்பாக பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார்கள்-மாற்றுத்திறனாளிகள் துறை சார்பாக பராமரிப்பு உதவித்தொகை,உதவி உபகரணங்கள் பெறுதல்,கடன் உதவி தொகை - வீட்டு வசதி துறை சார்பாக நகர்ப்புற வாழ்விடத்தில் வீடு அமைத்தல்,மனை வரன்முறை மற்றும் சமூக நலம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக பெண் கல்வித் திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை குறித்த மனுக்கள் பெறப்பட்டு அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி அதிகாரிகளிடம் அளித்தனர்.
Next Story