கரூர் : மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

கரூர் :  மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

ஆண்டாள் கோவில் கிழக்கு ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்களிடம் பெறப்பட்டன

தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழி வகுக்கும் "மக்களுடன் முதல்வர் திட்டம்" முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் சில தினங்களுக்கு முன்பு துவக்கி வைத்தார். அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொது மக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை, மேலும் திறமையுடன் செயல்படுத்திட திட்டமிட்டு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும்,நிர்வாகத்தில் வெளிப்பட தன்மையை ஏற்படுத்தி, பொதுமக்களை சென்று சேரும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில், உரிய முறையில் பரிசீலனை செய்து, தகுதியின் அடிப்படையில், அரசின் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த முகாமில், எரிசக்தி துறை,மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில், கரூர் மாவட்டம் ஆண்டாங் கோவில் கிழக்கு ஊராட்சி பி எஸ் ஆர் திருமண மண்டபத்தில் முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முகாமில், ஊராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் குறைகள் குறித்து மனுக்களாக கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். இந்த முகாமில், மண்மங்கலம் வட்டாட்சியர் குமரேசன்,திமுக தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் சாவி பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, மாவட்ட கவுன்சிலர் கன்னையன், தொமுச தாந்தோணி மேற்கு ஒன்றிய அமைப்பாளர் குமார், ஒன்றிய துணைச் செயலாளர் ரமேஷ், அயலக அணி துணை அமைப்பாளர் பார்த்திபன் கலந்துகொண்டு முகாமை சிறப்பித்தனர்.

Tags

Next Story