கரூர்: பொதுமக்கள் சாலை மறியல்

கரூர்: பொதுமக்கள் சாலை மறியல்

பொதுமக்கள்

மருத்துவர் நகரில் மழைநீர் வீடுகளை சூழ்ந்த்தால் பொதுமக்கள் அவதி. அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்பதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

. கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மே 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால், மழை நீர் ஆங்காங்கே தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதே போல் ,கரூர்- ஈரோடு சாலையில் உள்ள மருத்துவர் நகர் பகுதியில் கடந்த 2- நாட்களாக பெய்த கனமழையால், அப்பகுதிகள் முழுவதுமே மழை நீரால் சூழப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால், மழை நீரோடு கழிவு நீரும் சேர்ந்து சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் இன்று கரூர்- ஈரோடு சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மழை நீரை வெளியேற்றாமல், மறியலை கைவிட மாட்டோம் என தெரிவித்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தூய்மை பணியாளர்களை அழைத்து, மழைநீர் வடிய வாய்ப்புள்ள பகுதியில் தேங்கிய தண்ணீரை எடுத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

Tags

Next Story