கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அன்பு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் அன்பழகன் தலைமையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் 9- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகத்தில் ஒருங்கிணைந்த அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், மொத்த ஆசிரியர்களை கணக்கிட்டு, அதில் பார்வையற்றவர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீட்டை சிறப்பு முதுகலை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி, ஆசிரியர் நியமனம் செய்திட வேண்டும் எனவும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, நியமன தேர்வில் இருந்து முழுமையாக விளக்க அளித்து, உடனடியாக பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும், வேலையில்லாதோருக்கான உதவித்தொகையை ரூபாய் ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், விலைவாசி ஏற்றத்தை கருத்தில் கொண்டு, அண்டை மாநிலங்களில் மாதாந்திர உதவித் தொகை வழங்குவது போல, தமிழகத்திலும் ரூபாய் 1500 இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


