ரயில் நிலையத்தில் பேட்டரிகார்களை அழைக்க நிரந்தர செல்போன் எண்

ரயில் நிலையத்தில் பேட்டரிகார்களை அழைக்க நிரந்தர செல்போன் எண்

பேட்டரி கார் 

மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் தென்னக ரயில்வே மேலாளருக்கு அனுப்பிய மனுவில் ரயில் நிலைய பேட்டரி கார்களுக்கு நிரந்தர செல்போன் எண் வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு மயிலாடுதுறை பயணிகள் சங்கம் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,தற்சமயம் பெரும்பாலான ஊர் ரயில் நிலையங்களில் பேட்டரி கார் செயல்பட ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஓரு ஊரில் ஒரு முறை ஒரு நபர் பேட்டரி கார் இயக்குவதற்கு காண்ட்ராக்ட் எடுத்தால் அவர் ஒரு தொலைபேசி எண் தருகிறார் அதனை நாம் சேமித்து வைத்துக் கொள்கிறோம்.

ஒரு குறிப்பிட்ட வருடம் கழித்து மீண்டும் டெண்டர் விடும் பொழுது மற்றொரு நபர் அந்த காண்ட்ராக்டை எடுக்கும் பொழுது அவர் ஒரு புதிய தொலைபேசி எண் தருகிறார் இது நடைமுறை சிக்கலை ஏற்படுத்துகிறது. மயிலாடுதுறை நம்பருக்கு கால் செய்தால் வெளியூரில் உள்ள நபர் எடுக்கிறார் கோயம்புத்தூர் பேட்டரி கார் நம்பருக்கு கால் செய்தால் எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் உள்ளவர் எடுக்கிறார்.

இதனால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் பெரிதும் அவதி வருகின்றனர் இது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது நிரந்தரமான தொலைபேசி எண்ணை வழங்க ரயில்வே நிர்வாகம் ஒவ்வொரு ஊருக்கும் சியூஜி (CUG) நம்பர் கொடுத்து நிரந்தரமான தொலைபேசி எண்ணை வழங்குமாறு மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தின் மூலமாக கேட்டுக்கொள்கிறோம். என அதில் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story