அத்துமீறி லாட்டரி விற்பனை செய்த நபர் கைது

பசுபதிபாளையம் ரவுண்டானாவில் அத்துமீறி லாட்டரி விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனை நடப்பதாக பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அழகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 26 ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் பசுபதிபாளையம் ரவுண்டானா அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள பைவ் ஸ்டார் செல்போன் கடை அருகே, கள்ள லாட்டரி விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விற்பனையில் ஈடுபட்ட கரூர் வெங்கமேடு திட்ட சாலையைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் செந்தில்குமார் வயது 41 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூபாய் 250 மதிப்புள்ள 10 லாட்டரி டிக்கெட்டுகளையும், மேலும் டிக்கெட்டுகளை விற்பனை செய்து கையில் வைத்திருந்த ரூபாய் 640யும் பறிமுதல் செய்தனர்.

மேலும், செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலையபினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story