மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மைய நூலக கட்டிடம் அமைக்க இடம் கேட்டு மனு

X
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மைய நூலக கட்டிடம் அமைக்க இடம் கேட்டு மனு
குறைத்தீர் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்
மயிலாடுதுறையில் மாவட்ட நூலகம் அமைக்க, தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 6 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. மயிலாடுதுறை நகரில் நூலக கட்டடம் கட்டுவதற்கு 26,500 சதுரஅடி ஒதுக்கீட செய்ய மாவட்ட பொறுப்பு அலுவலர் மயிலாடுதுறை நகராட்சி ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இடம் கிடைக்காததால் நிதி வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுவிடும் என்பதால் திமுக உயர்மட்டக்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம் தலைமையிலான குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் இடம் தேர்வு செய்து தர வலியுறுத்தி மனு அளித்தனர்.மயிலாடுதுறை எஸ் .பி .அலுவலகத்தின் அருகில் நகராட்சி நிர்வாகம் சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல என்றும் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள இடத்தை நகராட்சி ஒதுக்கவேண்டும் என்று குத்தாலம் கல்யாணம் தலைமையில் திராவிடர்கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், இரண்டு கம்யூ கட்சியினர் உட்பட 17 அமைப்பினர் மாவட்டஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். நகராட்சி ஆணையர் தொடர்ந்து தடங்கல் ஏற்படுத்துவதாகவும் கூறினர். காலதாமதம் ஏற்பட்டால் மற்ற மாவட்டத்திற்கு அந்த நிதி செல்லக்கூடிய நிலை இருப்பதாகவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
