கட்டுமான மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தக் கோரி மனு

கட்டுமான மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் கரூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கட்டுமான மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள். கரூர் மாவட்ட ஹாலோ பிளாக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில், சங்கத்தின் தலைவர் தங்கவேல் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் செயலாளர் சக்திவேல், பொருளாளர் பழனிச்சாமி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் ஹாலோ பிளாக்ஸ் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த பொருளாளர் பழனிச்சாமி, எங்களது ஹாலோ பிளாக்ஸ் கற்கள் உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களான சிப்ஸ், ஜல்லி, பவுடர், எம்சாண்ட் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறோம்.

சமீப காலமாக இதன் விலை 70 சதம் முதல் 100 சதம் வரை உயர்த்தி உள்ளனர் கிரசர் பொருட்கள் உற்பத்தியாளர்கள். இந்த விலையேற்றத்தால் ஹாலோ பிளாக் தொழிலை மிகவும் பாதித்துள்ளது. இதனால், இதர கட்டுமான பொருட்களின் விலையும் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக அச்சம் கொள்வதாகவும் தெரிவித்தார். இதனால், கட்டுமான பணிகள் தொடர்ந்து குறைந்து வருவதால் தொழில்கள் நலிவடைந்து விடுமோ! என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, பொதுமக்களுக்கும், எங்களது நிறுவனம் சார்ந்த உற்பத்தி பொருளான ஹாலோ பிளாக் உற்பத்திகளையும், அதை சார்ந்த தொழிலாளர்களையும் பாதிப்பு உள்ளாக்கும், இந்த கிரஷர் பொருட்களின் விலை ஏற்றத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததாக தெரிவித்தார்.

Tags

Next Story