விசுவ இந்து அமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளிப்பு

விசுவ இந்து அமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளிப்பு

மனு அளிக்க வந்தவர்கள் 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூஜாரிகள் பேரமைப்பு, விசுவ இந்து பரிசத் அமைப்பினர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூஜாரிகள் பேரமைப்பு, விசுவ இந்து பரிசத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கரூர் மாவட்ட பூஜாரிகள் பேரமைப்பு மற்றும் விசுவ இந்து பரிசை அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அமைப்பின் திருச்சி கோட்டை அமைப்பாளரும் கரூர் மாவட்ட செயலாளருமான பிச்சைமுத்து தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.

மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிச்சைமுத்து, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மனு அளித்து விட்டோம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இன்று தமிழக முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் மனு அளிக்க தீர்மானித்து, இன்று மனு அளிக்க வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், தங்களது கோரிக்கைகளான பூஜாரிகளுக்கு மாதம் தோறும் பத்தாயிரம் சம்பளம், கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம், ஓய்வூதியம் பெறுவதற்காக வருட வருமானம் குறித்த சான்று அளிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

அந்த சான்றினை பெறுவதற்கு உள்ள இடையீடுகள் அதிகமாக உள்ளதால், பூஜாரிகள் நலவாரியம் மற்றும் இந்து சமய அறநிலை துறை சார்பில் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்றும், திருக்கோவிலுக்கு அரசின் சார்பில் தீப எண்ணெய் மற்றும் பூஜை பொருட்களை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மனு அளித்துள்ளதாகவும், இதன் மூலம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்புவதாக தெரிவித்தார்.

Tags

Next Story