கரூரில் சாலை பணியாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

கரூரில் சாலை பணியாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

கரூரில் சாலை பணியாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட டி. செல்லாண்டிபாளையம் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் செவந்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன்.ஜெயராம், கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மண்டல துணை தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக நிறைவேற்ற வலியுறுத்தியும்,

போராட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பணி வழங்க கோரியும், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவிக்குமாரிடம் அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story