குடிநீர் திட்டத்தை வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்தி, கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்தி, கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு. கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா, குன்னக்கவுண்டன்பட்டி அருகே உள்ள தலையாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து குடிநீர் வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர். இது தொடர்பாக தலையரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் செய்தியாளரிடம் தெரிவிக்கும் போது, எங்கள் பகுதியில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் எங்கள் பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ரூபாய் சுமார் 240 கோடியில் சிவகங்கை மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக, பெரிய அளவிலான குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்றது. ஆயினும், அந்தக் குடிநீர் திட்ட பணிகளுக்காக அமைக்கப்பட்ட குழாய்களை தற்போது அகற்றி உள்ளனர். இது தொடர்பாக திட்ட பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரிடம் கேட்டும் உரிய பதில் இல்லை. மேலும், இது தொடர்பாக ஊராட்சி தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் என அனைவரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த திட்டப் பணிகள் முடிக்க நீண்ட வருடங்களாகும் என்பதால், இடைக்காலமாக எங்கள் பகுதி மக்களுக்கு, குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்ததாகவும், மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story