பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடை இல்லாமல் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு !

பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடை இல்லாமல் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு !

மனு

பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடை இல்லாமல் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடை இல்லாமல் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மனு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வேட்டமங்கலம் அருகே உள்ள நொய்யல் குறுக்கு சாலை பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தருடன் இன்று மாவட்ட ஆட்சியரிடம் வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.

அவரது மனுவில், நொய்யல் குறுக்குசாலை, வெள்ளியம்பாளையம், கணபதிபாளையம், அண்ணாநகர், பங்களா நகர் மற்றும் நெய்க்குப்பம் பகுதிகளில் சுமார் 600 குடும்பங்களை சேர்ந்த சுமார் 1800 பேர் வசித்து வருவதாகவும், இப்பகுதி மக்களுக்கு மறவாபாளையம் காவிரி ஆற்றில் நீர் எடுத்து, மேற்கண்ட ஊருக்கு நீர் தேக்க தொட்டிகள் மூலம் வேட்டமங்கலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் சப்ளை செய்து வந்தது. கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி குடிநீர் விநியோகம் செய்த போது மோட்டார் பழுதடைந்ததால் உடனே சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.

இதுபோல் பலமுறை மோட்டார் பழுதாகி குடிநீர் வினியோகம் தடைப்பட்டு உள்ளது. எனவே உடனடி தீர்வாக லாரி மற்றும் டிராக்டரில் குடிநீர் சப்ளை செய்ய வலியுறுத்தியும், விரைவில் மின்மோட்டாரை பழுது நீக்கி சீரான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்ததாக லோகநாதன் தெரிவித்தார்.

Tags

Next Story