மனு அளித்த டிப்பர் லாரி உரிமையாளர்கள்

மனு அளித்த டிப்பர் லாரி உரிமையாளர்கள்

 பொள்ளாச்சியில் டிப்பர் லாரிகளை இயக்குவதில் உள்ள வழித்தட இடர்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு, சப் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் டிப்பர் லாரிகளை இயக்குவதில் உள்ள வழித்தட இடர்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு, சப் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. கல்குவாரிகளில் இருந்து கற்கள்,மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் இந்த டிப்பர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 500க்கும் மேற்பட்டவர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கேளபாளையம் பகுதியில் உள்ள கல் குவாரியில் இருந்து கற்கள் எடுத்து செல்லும் டிப்பர் லாரிகளை அவ்வழியாக வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது தொழிற்பேட்டை வழியாக கொண்டு செல்லப்பட்டது.அங்கு இருக்கும் சிலர் சாலைகளை ஆகிரமித்தும் அவ்வழியாக டிப்பர் லாரிகளை இயக்கக் கூடாது என பிரச்சனை செய்தும் வருகின்றனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி இன்று டிப்பர் லாரிகளை நிறுத்திவிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் இருந்து உள்ளூர் டிப்பர் லாரிகளில் ஏற்றி செல்வதால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கற்கள்,மணல் கிடைக்கிறது. இந்நிலையில் அருகில் உள்ள வழித்தடத்தை பயன்படுத்தும் போது அப்பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக தற்போது டிப்பர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே டிப்பர் லாரிகளை இயக்குவதில் உள்ள வழித்தட இடர்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story