மயிலாடுதுறையில் மருத்துவ முகாமுடன் கூடிய புகைப்பட கண்காட்சி விழா

மயிலாடுதுறையில் மருத்துவ முகாமுடன் கூடிய புகைப்பட கண்காட்சி விழா

புகைப்பட கண்காட்சி 

மயிலாடுதுறையில் மருத்துவ முகாமுடன் கூடிய புகைப்பட கண்காட்சி 15ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட புளியந்தெருவில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் புகைப்படக் கண்காட்சி மற்றும் திட்டவிளக்க கண்காட்சியை மயிலாடுதுறை எம்.பி இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ,மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.

இப்புகைப்பட கண்காட்சியில், தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், மருத்துவ முகாம், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் அமைக்க காய்கறி விதைகள் வழங்குதல், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்குதல், விவசாயிகளுக்கு 1 இலட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,

பள்ளி மாணவர்களுக்கு வானவில் திட்டம். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில் சார் கடனுதவிகள் வழங்குதல். கூட்டுறவுத்துறை,சமூகநலத்துறை,மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டபணிகள், பள்ளிக்கல்வித்துறை, தாட்கோ, மீன்வளத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் தமிழ்நாடு அரசின் மக்கள்நலத்திட்டங்கள் தொடர்பான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள், பார்வையிட்டு வருகின்றனர். வருகிற 15 ஆம் தேதி வரை தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

முதல் நாள் நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, நகர்மன்ற துணைத்தலைவர் சிவக்குமார்,நகர்மன்ற உறுப்பினர் செந்தில் குமார் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story