அரச மரத்தின் நடுவே பிள்ளையார் தோற்றம் பக்தர்கள் பரவசம்

அரச மரத்தின் நடுவே பிள்ளையார் தோற்றம் பக்தர்கள் பரவசம்

அரச மரத்தின் நடுவே பிள்ளையார் தோற்றம் பக்தர்கள் பரவசம்

அரச மரத்தில் சுயம்புவாக தோன்றிய அற்புதப் பிள்ளையாரை வழிபட கூடும் பக்தர்கள் கூட்டம்.
மயிலாடுதுறையை ஒட்டியுள்ள ரூரல் பஞ்சாயத்தில் நேதாஜி நகர் 2வது தெருவில் சாலை ஓரத்தில் அரச மரமும் அதனுடன் இணைந்த வேம்புவும் உள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவற்றை வழிபட்டு வந்தனர். சென்ற வாரம் அரச மரத்தின் நடுப்பகுதியில் திடீரென்று தும்பிக்கையுடன் கூடிய யானை முகம் போன்ற ஒரு அமைப்பு தோன்றியது, இதைக் கண்ட தெரு மக்கள் நீண்ட நாட்களாக அங்கே ஒரு விநாயகரை வைத்து வணங்கி வந்ததாகவும் தற்பொழுது அங்கு அந்த விநாயகர் இல்லை. தற்பொழுது சுயம்புவாக விநாயகரே தோன்றியுள்ளது அற்புதம் என்றும் ஆகவே இது ஆற்புத பிள்ளையார் என்று பெயர் சூட்டி அப்பகுதி மக்கள் வழிபட ஆரம்பித்துவிட்டனர். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அதற்கு பூஜை செய்ய துவங்கி உள்ளனர் நாளுக்கு நாள் இந்த அற்புதப் பிள்ளையாரை காண்பதற்கு பக்தர்கள் கூடி வருகின்றனர்.

Tags

Next Story