நீர்மோர் சாப்பிடுங்க - எடப்பாடி பழனிசாமிக்கு பாமக வேட்பாளர் அட்வைஸ்

நீர்மோர் சாப்பிடுங்க - எடப்பாடி பழனிசாமிக்கு பாமக வேட்பாளர் அட்வைஸ்

பிரச்சாரம் 

பாமகவை வேடந்தாங்கல் பறவை என்று விமர்சிக்கும் எடப்பாடி பழனிச்சாமி கோடை’காலத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பிதற்றுவதால் அடிக்கடி நீர்மோர் சாப்பிட வேண்டும் ஏன் மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம க ஸ்டாலின் மயிலாடுதுறையில் கூட்டணி கட்சி பிரமுகர்களை சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், :- மயிலாடுதுறை நவக்கிரக ஸ்தலங்களில் மையப்பகுதியாக உள்ளது. பல்வேறு குறைகள் உள்ளது. கும்பகோணத்திற்கு 110 கோடி ரயில்வே திட்டங்களை பிரமர் மோடி கொண்டுவந்துள்ளார். மயிலாடுதுறையில் உள்ள குறைகளை போக்க பிரதமர் மோடி மீண்டும் பதவிக்கு வந்தவுடன் செய்வார். பாதாளசாக்கடை திட்டம் சரியாக செயல்படாமல் உள்ளதை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன்.

பாமக வேடந்தாங்கல் பறவை என்ற எடப்பாடி கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வராக இருக்கும் பழனிச்சாமி இப்படி பேசக்சடாது கோடைகாலத்தில் பிதற்றிகொண்டு இருக்கிறார் அடிக்கடி நீர்மோர், தர்ப்பூணி பழம் சாப்பிட்டு உடலை குளிர்ச்சி படுத்திகொள்ள வேண்டும். 1998ம் ஆண்டு, 1999ம் ஆண்டு பாஜவுடன் பாமக கூட்டணி அமைத்து வாஜ்பாயை பிரதராக்கி அழகுபார்த்தது பாமக.

2014, 2019, 2024 தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணியில்தான் பாமக இருந்து வருகிறது. மத்தியில் பாஜகவுடன் அன்றையில் இருந்து இன்றுவரை பல ஆண்டுகளாக கூட்டணி அமைத்து வருகிறோம். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் 10நாட்களில் மயிலாடுதுறை தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருவதாக கூறியுள்ளார். இதேபோல் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்கு வருகிறார்கள். இடஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து 44 ஆண்டுகளாக பாமக தலைவர் ராமதாஸ் கேட்டுவருகிறார் என்றார்.

Tags

Next Story