தபால் வாக்குப்பதிவு இன்று முதல் துவக்கம்

தபால் வாக்குப்பதிவு இன்று முதல் துவக்கம்

ஆட்சியர் அலுவலகம் 

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் இன்று முதல் தபால் வாக்குப்பதிவு செய்யலாம்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான வாதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 28.மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள 160.சீர்காழி, 161.மயிலாடுதுறை, 162.பூம்புகார், 170.திருவிடைமருதூர், 171.கும்பகோணம், 172.பாபநாசம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் 1844 மூத்த குடிமக்கள் மற்றும் 1138 மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குப்பதிவு பெற சட்டமன்ற தொகுதிகள் வாரியாக மொத்தம் 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் 05.04.2024, 06.04.2024 மற்றும் 08.04.2024 ஆகிய நாட்கள் வரை வாக்குகளை பெற உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலங்களில் இருந்து அலுவலர்கள் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று வாக்குபதிவு மேற்கொள்ள உள்ளனர்.

மேற்படி நாட்களில் வாக்களிக்காதவர்கள் எதிர்வரும் 19.04.2024 அன்று வாக்குச்சவாடிக்கு சென்று வாக்களிக்க இயலாது. இந்த குழுவினர் வருகை குறித்து முதல் நாள் அலைபேசி வழியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் அந்த வாக்காளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கலின்படி, 100 சதவீதம் இலக்கை அடைவதற்கு ஏதுவாக மேற்படி வாக்காளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தங்கள் வீட்டிலிருந்தே குழுவினர் வரும்போது வாக்களிக்குமாறும், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தவறாமல் தங்கள் வாக்குகளை அளிக்குமாறு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story