பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் ஒத்திவைப்பு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் ஒத்திவைப்பு

நடைபயணம் ஒத்திவைப்பு

மயிலாடுதுறையில் இன்று நடைபெறுவதாக இருந்த என் மண் என் மக்கள் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி நிகழ்ச்சி ஒத்திவைப்பு.
பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை , தமிழக முழுவதும் என் மண் என் மக்கள் என்ற முழக்கத்துடன் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். டிசம்பர் 1ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் நடை பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மழை காரணமாக நடை பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று மதியம் இரண்டு மணி அளவில் செம்பனார் கோயிலில் துவங்கி மயிலாடுதுறை பகுதியில் நடை பயணமும் பொதுக்கூட்டமும் நடத்த அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி இன்று நடைபெற இருந்த நடைபயண நிகழ்ச்சி மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .

Tags

Next Story