மயிலாடுதுறை ஒரு சில பகுதிகளில் நாளை மின் வெட்டு

மயிலாடுதுறை ஒரு சில பகுதிகளில் நாளை மின் வெட்டு
பைல் படம்
மயிலாடுதுறை,பாலையூர், நீடூர் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் நாளை காலை 9 மணி முதல் நண்பகல் 3 மணி வரை மின்வெட்டு என அறிவிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை,நீடூர், பாலையூர் ஆகிய பகுதிகளில் நாளை 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மின் பராமரிப்பு பணி இருப்பதால் மயிலாடுதுறை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும், மகாதான தெரு, பெரிய கடைத்தெரு, பூம்புகார் ரோடு, தருமபுரம் மெயின் ரோடு, தரங்கை சாலை,GH ரோடு. நீடுர் துணைமின் நிலையத்திலிருந்து -நீடூர் மின்பாதை பாலையூர் துணை மின் நிலையத்திலிருந்து மாந்தை, நக்கம்பாடி, திருமங்கலம், ஸ்ரீகண்டபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story