சாலையின் நடுவே மின்கம்பங்கள்; வாகன ஓட்டிகள் அவதி

பொன்னேரி ரயில் நிலைய சாலையின் நடுவில் அகற்றப்படாமல் உள்ள மின்கம்பங்களால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி சார்பில் ரயில்வே நிலைய சாலையானது புதிதாக அமைக்கப்பட்டது சிமெண்ட் கான்கிரீட் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்களை உரிய முறையில் அகற்றாமல் சாலை ஒப்பந்ததாரர் அமைத்துள்ளதால் அவ்வழியாக இரவு மற்றும் பகல் வேலைகளில் அவசரத் தேவை மற்றும் பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அதனை கடந்து செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்

இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது புதிய சாலை அமைத்து பல மாதங்கள் ஆகியும் மின் கம்பங்களை அகற்றாமல் சாலையின் நடுவிலேயே மின்கம்பங்கள் ஆங்காங்கே உள்ளதால் ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் மற்றும் அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் செல்வதற்கும் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக மின்கம்பங்கள் அகற்றப்படாமலேயே சாலை அமைத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழந்துள்ளது.

Tags

Next Story