சிறுமிகள் கர்ப்பம் - தகவல் தெரிவிக்க செவிலியர்களுக்கு அறிவுறுத்தல்

சிறுமிகள் கர்ப்பம் - தகவல் தெரிவிக்க செவிலியர்களுக்கு அறிவுறுத்தல்

வளரிளம் பெண்கள் கர்ப்பம் தடுப்பு  கலந்தாய்வு கூட்டம் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமணமாகாத 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பம் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் சுகாதார செவிலியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குடும்ப நலம் பொது சுகாதாரத்துறை சார்பில் வளரிளம் பெண்கள் கர்ப்பம் தடுப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட சுகாதாரத் துறை தாய், சேய் நலஅலுவலர் அம்பிகா உள்ளி;ட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமணமாகாத 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பம் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க சுகாதார செவிலியர்களுக்கு அறிவுறுத்தினர். இதில், சுகாதாரத்துறை உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட மகளிர் அதிகார மைய அலுவலர்கள், சமூக பாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அரசு அலுவலர்கள், அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாத உதவித்தொகை பயன்பெறும் சிசிசி சமுதாயக் கல்லூரி நர்சிங் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு மைய உதவிய எண் 181 குழந்தைகளுக்கான பாதுகாப்பு அழைப்பு 1098 வளர் இளம் பெண்கள் முறையற்ற கர்ப்பம் தடுத்தல் பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

Tags

Next Story