தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றத்தை அரசாணையாக மாற்றிய பிரதமர் மோடி !

தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றத்தை அரசாணையாக மாற்றிய பிரதமர் மோடி !

தேவேந்திர குல வேளாளர்

பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றத்தை அரசாணையாக மாற்றி தந்த பிரதமர் மோடிக்கு எங்கள் வாக்கு. கரூரில், பிரச்சாரம் மேற்கொண்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர்.
பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றத்தை அரசாணையாக மாற்றி தந்த பிரதமர் மோடிக்கு எங்கள் வாக்கு. கரூரில், பிரச்சாரம் மேற்கொண்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பல்வேறு அரசியல் கட்சிகளும், வியூகங்களை அமைத்து தேர்தலில் வெற்றி அடைவதற்காக பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் அடிப்படையில், கரூர், திருமா நிலையூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளரும், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர். பி ரமேஷ் பிஜேபி கட்சிக்கு ஆதரவாக தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்தை மேற்கொண்டார். பிரச்சாரத்தின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த ரமேஷ், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு, பிஜேபி கட்சியின் தாமரை சின்னத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினர் ஏன் வாக்களிக்க வேண்டும்? என்பது தொடர்பாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். அரசாங்க பதிவில் பட்டியல் இனம் என பல வருடங்களாக எங்கள் சமுதாயத்தை அழைத்து வரும் நிலையை மாற்றி, சேர, சோழ, பாண்டியர் மூவேந்தர் மரபு கொண்டவர்கள், தேவேந்திர குல வேளாளர் என்ற பண்பாடு மிக்க சமூகம் என, பிரதமர் நரேந்திர மோடி 2021 ஆம் ஆண்டு ஏழு உட்பிரிவுகளை இணைத்து பெயர் திருத்த அரசாணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுத்தார். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்துக்கு வரும் திமுக,அதிமுக எம்பிக்கள் இந்த கோரிக்கையை வாசிக்கும் போது பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினார்கள். ஆனால், பிரதமர் மோடி பிஜேபி எம்பிக்களை வைத்து கோரிக்கையை நிறைவேற்றி தந்தார். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு தனி தொகுதிகளில் தென்காசி, திருவள்ளுவர், நாகப்பட்டினம் என மூன்று தொகுதிகளை தேவேந்திர குல வேளாளர்களுக்கு பிஜேபி வழங்கியுள்ளது. ஆனால் திமுக, அதிமுக தென்காசியை மட்டுமே கடந்த 70 ஆண்டுகளாக ஒதுக்கி வந்துள்ளது. மேலும், எங்கள் சமுதாயத்தை பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி அரிஜன் என்றும், திராவிட கட்சிகள் தாழ்த்தப்பட்டவன் என்றும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலித் என்றும் குறிப்பிட்டனர். ஆனால்,எங்களது பண்பாட்டு பெயரை நிலை நிறுத்தி அரசாணையாக தந்தவர் பிரதமர் மோடி என்றும், தமிழகத்தில் வடமாவட்டங்களை தவிர 28 மாவட்டங்களில் அதிகமாக சுமார் 2 கோடி பேர் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போதும், இடைத்தேர்தலின் போதும், எங்கள் சமுதாயத்தினர் பிஜேபி கட்சிக்கு அளித்த வாக்குகள் மூலம் தமிழகத்தில் பிஜேபிக்கு ஒரு அடித்தளத்தை எங்கள் சமுதாயத்தினர் அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பது பிஜேபி கட்சியினருக்கும் தெரியும். தேர்தல் அறிக்கையிலும் எங்களது கோரிக்கை வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் அடிப்படையில் தமிழக முழுவதும் பிஜேபிக்கு ஏன் ஓட்டு போட வேண்டும் என்பது குறித்து எங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சியையும், கரூரில் போட்டியிடும் செந்தில் நாதனும், கோவையில் போட்டியிடும் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என தெரிவித்தார்.

Tags

Next Story