வேப்பம்பாளையம் அருகே தனியார் பேருந்து-லாரி மோதி விபத்து

காவல் நிலையம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ராஜபுரம் பிரிவு அருகே உள்ள புளியம்பட்டி பகுதி சேர்ந்தவர் முத்துசாமி வயது 68.அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி கௌசல்யா வயது 44. இவர்கள் இருவரும் எஸ்.எம்.என்ற பெயர் கொண்ட தனியார் பேருந்தில், ஜனவரி 31ஆம் தேதி காலை 11 மணியளவில், கரூர்- கோவை சாலையில் பயணித்துள்ளனர்.
இந்த பேருந்து வேப்பம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது, திருநெல்வேலி மாவட்டம், மேல இலந்தைகுளம் அருகே உள்ள தேவர் குளம் பகுதியைச் சேர்ந்த, அருமை கோட்டை துரை வயது 45 என்பவர், வேகமாக ஓட்டி வந்த லாரி, எஸ் எம் பேருந்தின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கௌசல்யா மற்றும் முத்துச்சாமி ஆகிய இருவரும் காயமடைந்தனர். இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கௌசல்யா அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,
இது தொடர்பாக லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய, அருமை கோட்டை துரை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
