கரூரில் தனியார் பள்ளி முதல்வர் செலின் அறிவுறுத்தல்.

கரூரில் தனியார் பள்ளி முதல்வர் செலின் அறிவுறுத்தல்.

தனியார் பள்ளி

பள்ளி குழந்தைகளுக்கு சத்தான உணவு அளித்தால் பாடத்தில் கவனம் செலுத்துவார்கள் என தனியார் பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.

கரூர் அருகே ஆண்டாங்கோவில் செயிண்ட் ஆண்டனி மேல்நிலை பள்ளியில், எல்.கே.ஜி மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் இருந்து டிரம்ஸ் அடித்து மாணவர்களை வகுப்பு அறைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் பேசிய பள்ளியின் முதல்வர் செலின் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு துரித உணவு கொடுக்காமல், காய்,பழங்கள் உணவாக அளிக்க வேண்டும் என்றார். அப்போது தான் அவர்கள் பள்ளியில் புத்துணர்ச்சிடன் இருப்பார்கள் என்றார்.மேலும், மாணவர்களுக்கு பெற்றோர்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்றார். விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story