போதை விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு எஸ். பி. பரிசு

போதை விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு எஸ். பி. பரிசு

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் போதை விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியில் வெற்றிபெற்றவர்களை பாராட்டி மாவட்ட எஸ்பி மீனா பரிசு வழங்கினார்.


மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் போதை விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியில் வெற்றிபெற்றவர்களை பாராட்டி மாவட்ட எஸ்பி மீனா பரிசு வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட மதுவிலக்கு மற்றம் ஆயத்தீர்வுத்துறை சார்பாக கடைபிடிக்கப்பட்டது. இன்றைய சூழ்நிலைகளில் இளைஞர்கள் மட்டுமில்லாமல், பள்ளி மாணவர்களும் போதை பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். போதை பொருள் தடுப்பு திட்டங்களில் சமூக ஈடுபாடு பற்றிய விழிப்புணர்வு, போதைப்பொருட்களின் தீமைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அரசு அறிவுறுத்தலின்படி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவுப்படி மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக விழிப்புணர்வு பேரணி, ஓவியப்போட்டி, விழிப்புணர்வு முகாம், விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி, மாரத்தான் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாணவ, மாணவிகளுக்கு போதை பொருள் ஒழிப்பு தொடர்பான பேச்சுப்போட்டி, கவிதை, நாடகம் மற்றும் நடனம் ஆகியன நடத்தப்பட்டது. இதில் டாக்டர். மஞ்சுகேஸ்வரி போதை பொருள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி கருத்துக்களை விளக்கினார். முன்னதாக விழிப்பணர்வு கலைநிகழ்ச்சி போட்டிகளில் மாணவர்கள், இளைஞர்கள், காவல்துறையை சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு நடைபெற்ற ஆடல், பாடல், நாடகம், பேச்சுபோட்டி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதில் மாவட்ட எஸ்பி மீனா மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர். .

Tags

Next Story