வாழ்க்கையில் முன்னேற முயற்சியும் உழைப்பும் வேண்டும் மாவட்ட ஆட்சியர்

வாழ்க்கையில் முன்னேற முயற்சியும் உழைப்பும் வேண்டும் மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை தருமபுர ஆதீன கலைக் கல்லூரியில் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.


மயிலாடுதுறை தருமபுர ஆதீன கலைக் கல்லூரியில் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் . கல்லூரிகளின் சார்பில் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். முன்னதாக மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சிறப்புரையாற்றினார். அப்போது தொடர்ச்சியான முயற்சியும் , உழைப்பும் உள்ளவர்களும் மற்றும் படிக்காதவர்களும் முதல்வராக ஆகியிருப்பதாக தெரிவித்தார். மாணவர்கள் எந்த கல்லூரியில் படித்தாலும் முயற்சி சரியாக இருந்தால் வெற்றி பெற முடியும் என அறிவுரை வழங்கினார். மேலும் வாழ்க்கையில் முன் செல்ல வேண்டுமென்றால் கடுமையான உழைப்பு மற்றும் ஒருமித்த சிந்தனையோடு பயணிக்க வேண்டும், தொடர்ந்து நாம் யாருக்கும் போட்டி கிடையாது என்றும் உங்களுக்கு நீங்கள்தான் போட்டி என்றும் யாரைப் பார்த்து பொறாமைப்பட தேவையில்லை என்றும் மாணவர்களிடம் தெரிவித்தார். உழைப்பு மற்றும் அறிவு இரண்டையும் தொடர்ச்சியாக பளரன வேண்டும் அப்போதுதான் உழைப்பவர்களுக்கு தோல்வி கிடையாது எனவும் அறிவுரை வழங்கினார். இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது எனவும் கூறினார். பின்னர் மாணவர்கள் நினைத்தால் வாழ்க்கையின் உயரமான இடத்திற்கு செல்ல முடியும் எனவும் அதற்கு தான் எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்தார். மேலும் விபத்தில் தனது வலது கை முற்றிலுமாக சிதைந்து விட்டதாகவும் தொடர்ந்து தனது கடின உழைப்பு மற்றும் முயற்சியால் இடது கையால் எழுதி எம்பிஏ படித்து பிறகு ஐஏஎஸ் படித்து வெற்றி பெற்று இன்று மாவட்ட ஆட்சியராக உங்கள் முன் நிற்பதாகவும் கூறினார். தான் அறிவை விட உழைப்பை நம்பியதால் தான் வெற்றி பெற்றதாகவும் கூறினார். இந்த நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி , மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை மற்றும் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்

Tags

Next Story