கண்டன ஆர்ப்பாட்டம்

வெண்ணைமலையில் தொழிலாளர் நல வாரியத்தின் இணையதளம் முடக்கம் ஏற்பட்டதை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர் அடுத்த வெண்ணைமலை தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு, தொழிலாளர் நல வாரியத்தின் இணையதளம் முடக்கம் ஏற்பட்டதை கண்டித்து, கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில், வாயில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ் மாநில, தேசிய அனைத்து உடல் உழைப்பு பொது தொழிலாளர் சங்க பொது செயலாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், கட்டுமான தொழிலாளர்கள் நல சங்க துணை செயலாளர் சிவ சங்கரி, தமிழக அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்க மாநில செயலாளர் ராதிகா உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது 2023 ஆம் ஆண்டில் மட்டும் மூன்று முறை இணையதள சேவை முடங்கியதால் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி, தொழிலாளர்கள் குறித்து பதிவு செய்ய முடியாமலும், பணப்பயன் பெற முடியாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதால், அனைத்து தொழிலாளர்களும் பயன் பெறும் வகையில் இணையதள சேவை முடக்கத்தை சரி செய்து பணப்பலன்களை அனைத்து தொழிலாளர்களும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

Tags

Next Story