மயிலாடுதுறையில் சிஏஏவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் சிஏஏவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

மயிலாடுதுறை சின்ன கடை வீதியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் சிஏஏ எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியாவின் மதசார்பின்மையை சீர்குலைக்கும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விசிக மோகன் குமார், திராவிடர் கழகம் தளபதி ராஜ் திராவிடர் விடுதலைக் கழகம் மகேஷ், சிபிஐ, சி.பி.எம், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story