சர்க்கரை ஆலையை ஜப்தி செய்ய எதிர்ப்பு - விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் உள்ள என். பி .கே .ஆர். ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம், தனியார் நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய தொகைக்கு 11 கோடி ரூபாய்க்கு நீதிமன்ற தீர்ப்பாகி, நிறைவேற்று மனு நடைமுறைக்கு வந்துள்ளது, மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில், சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள, 40 சர்வே எண்களில் உள்ள கட்டிடங்கள், மதிப்பீடும், அளவும்,மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் நீதிமன்ற ஊழியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் என 15 க்கும் மேற்பட்ட, ஊழியர்கள், தங்கள் பணியை மேற்கொண்டனர். இந்த தகவல், கேள்விப்பட்ட கரும்பு விவசாயிகள், மாநில செயலாளர் காசிநாதன் தலைமையில்,ஒன்று திரண்டு தமிழக அரசே,ஆலையை ஜப்தியிலிருந்து, காப்பாற்று, மீண்டும் ஆலையை திறக்க நடவடிக்கை எடு என முழக்கமிட்டனர். இந்த சர்க்கரை ஆலை 1987 எம்ஜிஆர், ஆல் துவக்கப்பட்டு, 2017ல், எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில், மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
