தென்னை விவசாயத்தை காக்க, கையில் தேங்காயை ஏந்தி போராட்டம்

கரூரில்,தென்னை விவசாயத்தை பாதுகாக்க, கையில் தேங்காய் ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கரூரில்,தென்னை விவசாயத்தை காக்க, கையில் தேங்காயை ஏந்தி போராட்டம். கரூர் உழவர் சந்தை முன்பு, கரூர் மாவட்ட தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், தென்னை விவசாயத்தை காக்க வலியுறுத்தி, சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம், தென்னை விவசாயிகள் சங்க செயலாளர் சாமியப்பன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அரசு நியாயவிலைக் கடைகளில், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில், பாமாயிலுக்கு மானியம் கொடுத்து இறக்குமதி செய்து விற்பதை ரத்து செய்து, தமிழ்நாட்டில் விளையக்கூடிய தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட பொருட்களில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்து, மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் என தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story