அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்: தமிழர் தேசம் கட்சி மீது வழக்கு பதிவு
கரூரில், அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர் தேசம் கட்சி பொறுப்பாளர் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு பதிவு. கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழர் தேசம் கட்சியின் சார்பில், மாவட்ட தலைவர் அருள்ராஜ் தலைமையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட பாதிப்பை குறிப்பிட்டு, தேர்தலின் போது மதுவிலக்கு கொண்டு வருவதாக திமுக அரசு கூறியதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மாவட்ட தலைவர் அருள்ராஜ், மாநில மாணவரணி செயலாளர் பூமி அம்பலம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஒன்றிய பொருளாளர் பிரசாந்த் உள்ளிட்ட 18 பேரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர். மேலும், அனைவரையும் காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர் காவல்துறையினர்.