விவசாயிகளுக்கு நவீன நீர்பாசன கருவிகளை வழங்கல்
பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் நெல் சாகுபடி அதிகளவில் விவசாயிகள் செய்து வருகின்றனர்.நெல் சாகுபடியில் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி அதிக அளவு உற்பத்தியை பெருக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நீர் மற்றும் புவிசார் ஆராய்ச்சி மையம் சார்பில் நெல் வயல்களில் மண்ணின் மேற்பரப்பிற்கு கீழ் உள்ள நீர் அளவை கண்டறியும் வகையில் நீர் குழாய் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கருவியை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் உள்ள நெல் வயல்களில் பொருத்தி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கபட்டது.இதில் மத்திய நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சாரங்கி மற்றும் நீர் மற்றும் புவிசார் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் பழனி வேலவன் ஆகியோர் கலந்துகொண்டு வயல்களில் நீர் குழாய் கருவியை பொருத்தும் பணியை தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடரந்த்து நீர் குழாய் கருவியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த நவீன கருவியால் நெல் வயல்களின் கீழ்ப்பரப்பில் உள்ள நீர் அளவை கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் தண்ணீரை பயன்படுத்தினால் 30 விழுக்காடு வரை தண்ணீரை மிச்சப்படுத்தி வயல்களில் நெல் சாகுபடியை அதிகரிக்க முடியும் என்றும் விவசாயிகள் இந்த கருவியை வாங்கி பயன்படுத்தி தண்ணீரை மிச்சப்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செல்வகுமார் தெரிவித்தனர்.