திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர் கூட்டமத்தில் உறுதிமொழியேற்பு மஞ்சப்பை வழங்குதல்

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர் கூட்டமத்தில் உறுதிமொழியேற்பு மஞ்சப்பை வழங்குதல்

உறுதிமொழியேற்பு மஞ்சப்பை

மயிலாடுதுறையில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரித்து வழங்க பச்சைநிறம், நீளநிற கூடைகள், மஞ்சப்பைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நகராட்சி மற்றும் பெசன்ட் நகர் நலவாழ்வு சங்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம் பெசன்ட் நகர் பார்க்கில் நடைபெற்றது. என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏபி மகாபாரதி கலந்துகொண்டு மயிலாடுதுறை நகராட்சியை தூய்மை நகராட்சியாக உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி அறிவுறுத்தினார். தினசரி வீடு தோறும் வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் பச்சை நிறக் கூடையில் மக்கும் கழிவுகளான உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், தோட்ட கழிவுகள், எலும்பு துண்டுகள், மீன் முட்டைகள், வீணான உணவு பொருட்களை வழங்க வேண்டும், நீல நிறக் கூடையில் மக்காத கழிவுகளான பிளாஸ்டிக் பைகள், கேரிபேக்குகள், பாலித்தீன் கழிவுகள், தண்ணீர் பாட்டில்கள், அனைத்து விதமான பேக்கிங் கவர்கள், உடைந்த பிளாஸ்டிக் பெட்டிகள் டயர் டியூப், ரப்பர் கண்ணாடி பொருட்கள் பயனற்ற எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் பொருள்களை வழங்க கோரி பச்சைநிறம், நீளநிறக் கூடைகள், மஞ்சப்பைகள் பொதுமக்களுக்கு வழங்கினார் சானிடரி நாப்கின் டயப்பர் வீட்டில் சிகிச்சைக்கு பயன்படுத்திய மருத்துவ கழிவுகளை தனியாக தர வலியுறுத்தப்பட்டது. உங்களுக்கு தெரியுமா உங்கள் வீட்டு குப்பை என்னவாகிறது என்று குப்பைகளிலிருந்த உற்பத்தி செய்யப்பட்ட உரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 22வது வார்டை குப்பைகள் இல்லாத தூய்மை வார்டாக மாற்றும் நடவடிக்கைகளில் பணி செய்ய வார்டு உறுப்பினர் ஆனந்தி ஆனந்தகுமார் மற்றும் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அடுத்த வாரம் சனிக்கிழமை 22வது வார்டில் உள்ள அனைத்து தெருக்களிலும் ஆய்வு செய்வேன் என்றும் தூய்மையில் நகராட்சிக்கு எடுத்துக்காட்டாக இந்த வார்டு மாறியிருக்க வேண்டும் என்றார். முன்னதாக அனைவரும் தூய்மை இந்தியா இயக்க உறுதிமொழியேற்று கொண்டனர். இதில் கூடுதல் ஆட்சியர் ஷபீர்ஆலம், வருவாய் கோட்டாட்சியர்கள் யுரேகா, அர்ச்சனா, மாவட்ட சுற்றுச்கசூழல் பொறியாளர் தமிழஒளி, நகராட்சி நகர்மன்’ற தலைவர் செல்வராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story