தரமற்ற சாலை அமைப்பதாக பொதுமக்கள் போராட்டம்

தரமற்ற சாலை அமைப்பதாக பொதுமக்கள் போராட்டம்

போராட்டம் 

மயிலாடுதுறை அருகே தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, கோவங்குடி கிராமத்தில் உள்ள கீழ தெருவில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய தார் சாலை அமைக்கப் பணியானது நடைபெற்று வருகிறது. சாலையை அகலப்படுத்தாமல் தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி ஏராளமான பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தரமான முறையில் சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் காரணமாக அரை மணி நேரம் அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது.

Tags

Next Story