மயிலாடுதுறை அருகே பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே பொதுமக்கள் சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு கடந்த ஜனவரி முதல்வாரத்தில் அறுவடை பணிகள் தொடங்கியது, கடந்த ஒருவாரமாக அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

ஆனால் கடந்த 22ம் தேதி மாவட்டத்தில் 60 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கூறி காளகஸ்திநாதபுரத்தில் கலெக்டர் மகாபாரதி கொள்முதல் பணியை தொடங்கி வைத்தார்.

ஆனால் இதுநாள் வரையில் கொள்மதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில்’ இன்று 15க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களில் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை காயவைத்து கொள்முதல் நிலைய வாயிலில் கொட்டிவைத்து இரவு, பகலாக காவல்காத்து வருகின்றனர்.

இந்நிலையில் தாழஞ்சேரி நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல்மூட்டைகளுடன் காத்துகிடந்த விவசாயிகள் மயிலாடுதுறை-மணல்மேடு வழிதடத்தில் கொண்டல் பகுதியில் நெல்மூட்டைகளை சாலையில் அடுக்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது

Tags

Next Story