ஜமீன் முத்தூர் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் முத்தூர் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம்.. பொள்ளாச்சி.. ஏப்ரல்..27 பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் முத்தூர் ஒரு பகுதியில் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.. இந்நிலையில் பல ஆண்டுகளாக காலம் காலமாக அங்கு மக்கள் வசித்து வரும் நிலையில் ஒரு வீட்டில் மூன்று குடும்பங்கள் மற்றும் நான்கு குடும்பங்கள் என இட நெருக்கடியில் வசித்து வருகின்றனர். இதனால் ஒரே வீட்டில் மூன்று குடும்பங்களுக்கு மேல் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி பலமுறை மனுக்கள் கொடுத்து வந்தும் தற்போது வரை மாற்று இடம் கொடுக்காமல் அலைக்கழித்து வருவதாகவும் நாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் காலியிடங்கள் உள்ளதாகவும் அதில் எங்களுக்கு நிலம் ஒதுக்கி தர வேண்டும் என கூறி வந்த நிலையில் அவர்களுக்கு நிலம் வழங்காமல் அதே பகுதியில் சொந்த வீடு வைத்திருக்கும் நபருக்கு இடம் ஒதுக்கியதால் நிலம் இல்லாதவர்கள் பஞ்சாயத்துக்குட்பட்ட சிறுவர் பூங்காவில் அந்த வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்தனர்.
இதனால் வார்டு உறுப்பினர் அனுப்பி கேட்டபோது எங்களுக்கு தெரியாது என அலட்சியமாக பேசியதாலும் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் எங்களுக்கு இப்பகுதியில் இடம் வேண்டும் எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் வந்த பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் எனக் கூறியதை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக பொதுமக்கள் கை விட்டு சென்றனர்.. இதனால் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.. ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649..