டாஸ்மாக் பாரில் தகராறு - இருவர் கைது
பைல் படம்
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு டாஸ்மாக் கடையில் அரசு அனுமதி பெற்று பார் நடத்தி வருபவர் கூரைநாடு பகுதியை சேர்ந்த சுதாகர். இவர் சம்பவத்த தினத்தன்று காலை 9 மணி அளவில் பாருக்கான இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கே வந்த சித்தர்காடு பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் யஸ்வந்த், கருணாநிதி மகன் ராஜ்குமார் ஆகியோர் தங்களுக்கு பாட்டில் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு சுதாகர், மதியம் 12 மணிக்கு கடை திறக்கப்படும் அப்பொழுது வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
மூவருக்கும் வாய் தகராறு முற்றி சுதாகரை பீர் பாட்டிலால் கன்னத்தில் அடித்தும் கையில் வைத்திருந்த அறிவாளால் ஓங்கி வெட்டியதில் சுதாகரது சுண்டு விரல் காயமானது, இதைக்கண்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்தபோது இருவரும் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து சுதாகர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் யஸ்வந்த் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து அறிவாளைக் கைப்பற்றி அவர்கள் மீது. கொலை மிரட்டல் மற்றும் ஆயுத தடைச் சட்டம் பிரிவில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்னர்.