ராகுல் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

எம்.பி ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு வெங்கமேட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
எம்.பி ராகுல் காந்தி பிறந்த நாள். வெங்கமேட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ராகுல் காந்தி எம்பியின் 54 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கரூர் மாநகர தலைவர் வெங்கடேஸ்வரன் மற்றும் வடக்கு நகர செயலாளர் ஸ்டீபன் பாபு தலைமையில் வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், கட்சி கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர. இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், வடக்கு நகர செயலாளர் பாலமுருகன்,உட்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்‌.

Tags

Next Story