தான்தோன்றி மலையில் கொட்டித் தீர்த்த மழை

தான்தோன்றி மலையில் கொட்டித் தீர்த்த மழை
தான்தோன்றி மலையில் சாலையில் பெருக்கெடுத்த மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

தான்தோன்றி மலையில் கொட்டித் தீர்த்த மழை. சாலையில் பெருக்கெடுத்த மழைநீர். வாகன ஓட்டிகள் அவதி. ஆந்திராவின் தெற்கு கடலோரம் மற்றும் அதை ஒட்டிய தமிழக வடக்கு கடலோரப் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுவதால் தமிழக முழுவதும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவிப்பு செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே லேசானது முதல் கனமான மழை பெய்து வருகிறது.

நேற்று மாலை கரூரில் கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல் இன்று சற்று முன்பு கரூர் அடுத்த தாந்தோணி மலை பகுதியில் கன மழை பெய்தது. மழை பெய்து ஓய்ந்தவுடன் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.

அதேசமயம் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்

Tags

Next Story