மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி

மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி

பேரணி 

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் நடந்த மதச்சார்பின்மை பாதுகாப்பு பேரணியில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் மயிலாடுதுறையில் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். இதில்திமுக, மதிமுக, விசிக. திராவிடர் விடுதலைக்கழகம், திராவிடர்கழகம் மமக, தமுமுக மற்றும் பல்வேறு இயக்கங்கள் ஒன்றினைந்து இந்த 30 ஜனவரி 1948 அன்று மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஆர்எஸ்எஸ் தொண்டரும் இந்து மகாசபா உறுப்பினருமான நாதுராம்கோட்ஷே என்பவர் இந்தக் கொலையை செய்தார், ஆனால் திட்டமிட்டு இந்தக் கொலையை செய்துவிட்டு மகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இஸ்லாமியர்கள்தான் இதை செய்தது என்றும் புரளி கிளப்பிவிடப்பட்டிருந்தது. தந்தை பெரியார் இதை எதிரத்து தெளிவுபடுத்தினார்.

கோட்ஷே ஆரம்ப காலத்தில் ஆர்எஸ்எஸ்சில் இருநதவர் ஆர்எஸ்எஸ்ஐ விட்டு வெளியேறிய பிறகுதான் இந்துமகாசபையில் சேர்ந்தார் என்றும் அதன்பிறகே காந்தியைக் கொலையை செய்தார் என்றும் கூறி வந்தவர்கள், தற்பொழுது கோட்சே ஒரு தேசபக்தர் என போற்றிப் புகழ்கின்றனர். இதனால் நாட்டின் மகாத்மாவின் உழைப்பு வீணாகிவிடும் என்பதால் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம், ஜனவரி 30ஐ மகாத்மா காந்தி படுகொலையான நாள். அந்த நாளில் அமைதிப் பேரணி நடத்துவது என முடிவெடுத்து பல்வேறு கட்சியின் தலைவர்கள் மயிலாடுதுறை முககிய வீதிகள் வழியாகச் சென்று மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பாக ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அமைதிக்கான உறுதிமொழியை ஏற்றுகொண்டனர்.

Tags

Next Story