ராமர் பாண்டி கொலை : மேலும் இருவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

ராமர் பாண்டி கொலை : மேலும் இருவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

எஸ்பி பிரபாகர் 

ராமர் பாண்டி கொலை வழக்கில் மேலும் இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

மதுரை மேலூரில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பான விசாரணை கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றம் சாட்டப்பட்ட கொலை குற்றவாளி ராமர் பாண்டி கடந்த இரு மாதத்திற்கு முன்பு கரூர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துவிட்டு, மீண்டும் ஊர் திரும்பி செல்லும் போது அரவக்குறிச்சி அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குற்றவாளிகள் எட்டு பேர் மீது ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்து உள்ள நிலையில், நேற்று மீண்டும், தேனி மாவட்டம், பெரியகுளம், மேலவீதி அருகே மேலமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் ஜெகதீஸ்வரன் வயது 23 என்பவர் மீதும், மதுரை மாவட்டம், மேலூர், கலைஞர் நகர் மில்கேட் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மகன் தமிழ்ச்செல்வன் என்கிற குட்டிச்சாக்கு வயது 30 என்ற இருவர் மீதும், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையிலும், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படியும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருவரையும் கோவை சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வார்கள் மீதும், பொது அமைதி சீர்குலைக்கும் நபர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்ற குற்றவாளிகள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story