ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு: அனுமதி மறுப்பு

ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சி  நேரடி ஒளிபரப்பு: அனுமதி மறுப்பு

காவல் நிலையம் 

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சி மயிலாடுதுறை திருஇந்தளூர் சன்னதி தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்ய போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் சன்னதி தெருவில் ஒரு தனியார் அறக்கட்டளை சார்பில் அயோத்தி ராமர் கோவில் ப்ராண ப்ரதிஷ்டையை முன்னிட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ளது குறித்து, மயிலாடுதுறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் எல்லை வரம்பிற்குள் தமிழ்நாடு காவல் சட்டம் பிரிவு 30(2)-ன் படி செயல்முறை ஆணைகள் 15.01.2024 முதல் 30.01.2024 வரை அமலில் உள்ளது.

என்பதாலும், நடத்த உள்ள நேரடி ஒளிபரப்பு செய்யும் இடமானது தனியார் மருத்துவமனைகள் உள்ளதாலும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமாக உள்ளதாலும். அதனால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும்,

22.01.2023-ம் தேதி அன்று திருவிழந்தூர் பரிமான ரங்கநாதர் சன்னதி தெருவில் அயோத்தி ராமன் கோவில் ப்ராண ப்ரதிஷ்டையை முன்னிட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய நடத்த அனுமதி மறுத்து ஆணையிடப்படுகிறது என மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story