லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் ஆர்.டி.ஓ அதிரடி ஆய்வு

லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் ஆர்.டி.ஓ அதிரடி ஆய்வு

ஆர்.டி.ஓ ஆய்வு 

மயிலாடுதுறை திரையரங்கில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆர்டிஓ, நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் விஜயா மற்றும் ரத்னா ஆகிய இரண்டு திரையரங்குகளிலும் சீர்காழியில் 1 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்பட்டிருந்தது. இன்று காலையில் முதல் காட்சி முடிந்து 2வது காட்சி துவங்கியபோது அதிக கட்டணம் வசூல் செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் மயிலாடுதுறை ஆர்டிஓ யுரேகா, தாசில்தார் சபீதாதேவி ஆகியோர் ரத்னா திரையரங்கில் ஆய்வு மேற்கொண்டனர், தரைதளம் ரூ.200க்கும் பால்கனி ரூ.250க்கும் என அனுமதிக்கப்பட்ட தொகை மட்டுமே வசூல் செய்யப்பட்டது தெரியவந்தது. திரையரங்கில் சுகாதார ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள் திரும்பினர்.


Tags

Next Story