கோமல் அருகே கமிஷன் பணம் கொடுக்க மறுப்பு: கைகலப்பு

கோமல் அருகே கமிஷன்  பணம் கொடுக்க மறுப்பு: கைகலப்பு

படுகாயமடைந்தவர் 

மயிலாடுதுறை கோமல் அருகே காண்ட்ராக்ட் வேலை செய்ததில் அடிதடி தகராறில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் கோமல் கொத்தங்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் காண்ட்ராக்ட் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் கொழையூரை சேர்ந்த குமார் ராஜா என்பவர் 2 வேலையை வாங்கி உள்ளார்.

அதற்கான கமிஷன் தொகையை கேட்டும் சரிவர கொடுக்கவில்லை. கமிஷனில் மீதி தொகையை கேட்டால் இன்று தருகிறேன் நாளை தருகிறேன், அரை மணி நேரத்தில் தருகிறேன் என்று கூறியதுடன் என்னை தரக்குறைவாக பேசியதுடன் உங்க சாதிகார பாயக கிட்டயே வச்சிக்க கூடாது இப்படிதான் செய்வீங்க என்று திட்டி உள்ளார்.

எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தால் நான் என் கேட்க போகிறேன் என்று திருப்பி கேட்டதற்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. குமார்ராஜாவின் மகன் சூர்யா சமாதானம் செய்து வைத்து, இனிமேல் பணத்தை நான் தருகிறேன் என் தந்தையிடம் கேட்க கூடாது என்று கூறிவிட்டார்.

ஆனால் இருவரும் பணத்தை கொடுக்காததால் குமார் ராஜா கடைக்கு சென்ற ராஜ்குமார் பணத்தை கேட்டபோது இருவருக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டு ராஜ்குமாரை அடித்து உதைத்து விரட்டிவிட்டனர். கொத்தங்குடி ஆற்றங்கரை பக்கம் சென்ற போது அங்கே சூர்யா மற்றும் ஐந்து பேர் சேர்ந்து கொண்டு இரும்பு ராடால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் படுகாயம் அடைந்த ராஜ்குமார் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பாலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கலில் சாதிப் பெயர் சொல்லி திட்டியது கண்டிக்கத்தக்கது என்றும் உரிய வழக்கு பதிவு செய்ய காவல்துறையினரை ராஜ்குமார் குடும்பத்தார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story