"மிக்ஜாம்" புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் .

"மிக்ஜாம்" புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்வு. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கிவைத்தார்.
"மிக்ஜாம்" புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் பொருட்கள் அனுப்பும் நிகழ்வு. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கிவைத்தார். தமிழகத்தின் தலைநகரம் சென்னை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களை "மிக்ஜாம் புயல்" பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இதனால் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து, பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் இன்று கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 ஆயிரம் போர்வைகளும், ஐந்தாயிரம் குடிநீர் பாட்டில்களும் சென்னைக்கு அனுப்பும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் சரவணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, நிவாரண பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனத்தை வழி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story