மத நல்லிணக்கம்: பொங்கல் விழாவில் இஸ்லாமிய மாணவிகள்

மத நல்லிணக்கம்: பொங்கல் விழாவில் இஸ்லாமிய மாணவிகள்

மயிலாடுதுறை அருகே நீடூரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நிலையில், அங்குள்ள பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்று மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். 

மயிலாடுதுறை அருகே நீடூரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நிலையில், அங்குள்ள பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்று மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.

மயிலாடுதுறை அருகே நீடூரில் இஸ்லாமிய சமுதாயத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று சமத்துவ பொங்கல் விழா மற்றும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதையொட்டி மாணவ மாணவிகளுக்கு போல போட்டி ஓவிய போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் உறியடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் அனைத்து சமுதாய மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதில், பெண்கள் குலவியிட்டும், கும்மி அடித்தும் பாரம்பரிய தமிழர் திருநாளை கொண்டாடினர். இஸ்லாமிய மாணவிகள் பலர் பொங்கல் வைத்து கவனத்தை ஈர்த்தனர்.

Tags

Next Story