களிமண் மூட்டைகளை அகற்றி மணல் மூட்டை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
களிமண் மூட்டைகளை அகற்றி மணல் மூட்டை
விபத்து அபாயம் ஏற்படும் என தெரிவித்ததால் சாலை பிரிப்பானில் இருந்த களிமண் மூடைகளை அகற்றி மணல் மூடைகளை அடுக்கிய நெடுஞ்சாலைத்துறையினர்
மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தின் வழியாக, மயிலாடுதுறை கும்பகோணம் சாலை ரயில்வே மேம்பாலத்தில் ,சாலை நடுவில் சாலை பிரிப்பான் இல்லாததால் இம்மேம்பாலத்தில் ஏற்படும் விபத்தை தடுப்பதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் ,சாலை நடுவே தடுப்பு அமைத்து இருவழிச் சாலையாக ஒத்திகை பார்ப்பதற்காக 500மீ தூரத்திற்கு சாலையின் நடுவில் களிமண் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர். அந்த மூட்டையின் மீது இரவிலும் பகலிலும் ஒளிரும் தன்மை கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. தற்பொழுது மழைக் காலமாக இருப்பதால் களிமண் கரைந்து சாலையில் பரவினால் அதுவே மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்திவிடும். இதன் ஆபத்தை உணர்ந்து உடனடியாக களிமண் மூட்டைகளை மாற்றி மணல் மூடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக களிமண் மூடைகளை அகற்றிவிட்டு மணல் மூடைகளை அடுக்கினர்.
Next Story