குத்தாலம் தாலுகாவிற்கு மழை அளவுகோல் நிலையம் அமைக்க கோரிக்கை
மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய மனு
குத்தாலம் தாலுகாவிற்கு மழை அளவுகோல் நிலையம் கேட்டு முன்னாள் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியிடம் மனு மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை கணக்கிடுவதற்கு மயிலாடுதுறை, மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம், பொறையார்,செம்பனார்கோயில் ஆகிய ஆறு இடங்களில் மட்டும் மழைமாணி உள்ளது.
இவைகள் அனைத்தும் மயிலாடுதுறை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது. மயிலாடுதுறையின் மேற்குப் பகுதியில் உள்ள குத்தாலம் தாலுக்காவில் பெய்யும் மழையின் அளவு கணக்கிடப்படுவதில்லை அதற்கான ஏற்பாடும் இல்லை. மயிலாடுதுறைக்கு மேற்கே17 கிலோமீட்டர் தூரம் உள்ள திருவாவடுதுறை, கோனேரிராஜபுரத்திலிருந்து கொள்ளிடம் ஆறு வரை 20 கிலோ மீட்டர் தூர சுற்றுவட்டாரத்தில் பெய்யும் மழை அளவு கணக்கிடப்படுவதில்லை குத்தாலம் தாலுகா முழுவதும் விவசாயப் பகுதியாகும். குத்தாலம் பகுதியில் மழை அளவு கணக்கிட ப்படுவது இல்லை என்பதால் விவசாயிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் மழை குறித்த சரியான தகவல் கிடைப்பதில்லை,
இதுகுறித்து குத்தாலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதியிடம் மனு ஒன்றை அளித்து குத்தாலம் பகுதியில் மழை அளவு கணக்கிடும் வஸ்து ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.