படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினர்

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினர்.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்காக மூன்று கட்ட போராட்டம் ஏற்கனவே நடத்தி முடித்துள்ளனர். இதில் மூன்றாவது போராட்டமாக பிப்ரவரி 27ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வைரப் பெருமாள் தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் கார்த்தி, மத்திய செயற்குழு உறுப்பினர் ஓபிஎஸ் செந்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன். ஜெயராம், முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பிரமணி, செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணை உடனடியாக வெளியிட வேண்டும். 2024 -பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள, முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், திடீரென படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story