கட்டாய கல்வி உரிமை சட்டம்: சிபரிசுகளுக்கு 'No'

கட்டாய கல்வி உரிமை சட்டம்:  சிபரிசுகளுக்கு No

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

கட்டாய கல்வி உரிமை சட்டம். சிபாரிசு அடிப்படையில் இடம் ஒதுக்க கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில், இலவச சேர்க்கையின் போது, சிபாரிசு அடிப்படையில் இடம் ஒதுக்க கூடாது என, தனியார் பள்ளிகளை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து சுயநிதி பள்ளிகளிலும்,

நுழைவு நிலையான எல் கே ஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத இடங்கள் அரசால் நிரப்பப்படுகிறது. இந்த இடங்களில் சேரும் மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரையிலான கல்வி கட்டணத்தை பள்ளிகளுக்கு அரசே வழங்கும். இதன்படி வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் இந்த மாதம் 20ஆம் தேதி வரை ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், அதை குலுக்கல் முறையில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாறாக சிபாரிசு அடிப்படையில் ஒதுக்க கூடாது என பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story